நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பணியிடங்களுக்கு துறை வாரியாக பணி ஒதுக்கீடு

1 Min Read

சென்னை, ஜூலை 6– நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2569 பணியிடங்களுக்கு துறைகள் வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2569 பணியிடங்களை நிரப்பிட கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்வு பெற்ற தேர்வாளர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்காணும் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *