நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெ.தமிழரசன் (வயது 72) உடல் நலக்குறைவால் நேற்று (5.7.2025) காலை மறைவுற்றார் என அறிந்து வருந்துகிறோம். இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். தந்தை பெரியார், தமிழர் தலைவர் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்தவர். இறுதிவரை சுயமரியாதை வீரராக திகழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்று (6-7-2025) காலை 11:00 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து (எண்.2/12 B, முதன்மைச் சாலை, எரவாஞ்சேரி, கீழ்வேளூர் வட்டம், நாகை மாவட்டம்) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரவாஞ்சேரி இடுகாட்டில் எவ்வித மூடச்சடங்குமின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்புக்கு… சாமுவேல் அவரது மகன் – 90431 43194