ஆவடி, ஜூலை 6– ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகை முதல் தளத்தில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி தோழர் எ.கண்ணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட துணை தலைவர் மு.ரகுபதி முன்னிலையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்புரையுடன் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் துவங்கியது.முதலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைக் கேற்ப அதிக அளவில் நிதி திரட்டி அளிப்பது என்றும் முதல் தவணையாக ஆகஸ்டு முதல் வாரத்தில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வழங்குவது.
விடுதலை சந்தா முடிவு பெற்ற தோழர்களை அணுகி புதுப்பிக்க செய் வதும் புதிய சந்தாதாரர்களை சேர்க்க தீவிரமாக செயல்படுவது.
அக்டோபர் மாதம் மறைமலைநகரில் நடைபெற இருக்கின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வெற்றிகரமாக நடைபெற பங்காற்றுவது.
மேற்கண்ட தீர்மானங்களை வழிமொழிந்து ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி,பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன் , திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ்,மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு, செயலாளர் சு.வெங்கடேசன், துணைசெயலாளர் சென்னகிருட்டினன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன்,துணைத்தலைவர் ஜெயராமன், கழக துணைத்தலைவர் வை.கலையரசன், மாவட்ட கழக மேனாள் செயலாளர் சு.சிவக்குமார், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், பெரியார் பெருந்தொண்டர்கள் துரை.முத்துக் கிருஷ்ணன், அம்பத்தூர் அ.வெ.நடராசன், சுந்தர்ராஜன், ஆவடி அண்ணா துரை,அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், பவன் ஆகியோர் உரையாற்றிய பின் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் பெரியார் உலகத்திற்கு அவரவர் பங்களிப்பை அறிவிக்க கேட்டுக் கொண்டதின் பேரில் கழக தோழர்கள் பங்களிப்பை அறிவித்தனர்.
பின்னர் ஜூன் மாதம் இணையேற்பு நாள் காணும் தோழர்கள் சிவகுமார்-ஜெயந்தி,சோபன்பாபு- ராதிகா,கண்ணன்- நதியா , சுந்தர்ராஜன்- விமலா மற்றும் பிறந்த நாள் கண்ட சேத்பட நாகராஜ், இசையின்பன் மகளிர் அணி கலந்து ரையாடல் கூட்டத்தில் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்ட இறைவி, பா.மணியம்மை ஆகியோருக்கும் மாவட்ட கழக சார்பாக பாராட்டு தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.