தென்காசி, ஜூலை 6– 29.6.2025 அன்று மாலை 6 மணிக்கு தென்காசி பேருந்து நிலையம் அருகில் தென்காசி மாவட்ட கழக சார்பாக வழக்குரைஞர் த.வீரனின் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
2500 கோடி யாருக்குப்போகும் நிதி?
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்.கை.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். மாதில ஒருங்கினைப்பாளர் இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் தே.வ.நர்மதா ஒன்றிய அரசின் போக்கினை கண்டித்து சமஸ்கிருத்ததுக்கு 2500 கோடி யாருக்குப் போகும் நிதி? சூட்சமம் புரிகிறதா நாட்டோரே! என்று ஒன்றிய பாஜக அரசின் அடாவடிதனத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
முன்னிலையாக கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை மாநில துணைத்தலைவர் ப.க. கே.டி.சி. குருசாமி பொதுக்குழு உறுப்பினர் வே.முருகன் மாவட்டதுணைத்தலைவர் ம.செந்தில் வேல், சங்கரன் கோவில் கருப்பசாமி, கீழப்பாவூர் இல.அன்பழகன்,நெட்டூர் செல்வமணி, ஆ.பூங்குன்றன் இளைஞரணி பொறுப்பாளர் சு.கோபால் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக பொதுக்குழு உறுப்பினர் வே.முருகன் நன்றியுரையாற்றினார்.