மிக கொடுமையான விடயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஓர் அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது. 6-இல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014-2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. வாலிபர்கள் (டீனேஜ்) மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பெற
ஜுலை 15யில் விண்ணப்பம்
ஜுலை 15யில் விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில்
இத்திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி முதல் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் குஜராத் பிஜேபி அரசு
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து, குஜராத் அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஒரு வாரத்திற்கான அதிகபட்ச பணிநேரம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும், பெண்கள் இரவு நேர முறையாக (ஷிஃப்டில்) பணியாற்றும் வகையிலும் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில், ஆந்திராவில் வேலை நேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த, அம்மாநில அரசு முடிவெடுத்தது. வேலை நேரத்தை உயர்த்தும் முடிவு சரியா?