பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் ‘ஜாதி கெட்டவள்’ என்ற நூலை எழுதிய சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (4.7.2025) கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் திருமகள் இறையன் குடும்பத்தினரும், தோழர்களும் பெரியார் திடல் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கழகப் பொருளாளரிடம் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார். பெரியார் மாணாக்கன் குடும்பத்தினர் மாதாந்திர நன்கொடை சந்தா தொகை ரூ.3700அய் வழங்கினர்.