டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகாரில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், ஓவைசி, ஆசாத், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தலைமையில் உள்ள சிறிய கட்சிகளால் பிரியும் வாக்குகள்; அதன் காரணமாக என்.டி.ஏ, இந்தியா கூட்டணி போடும் வெற்றிக் கணக்கு பாதிக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*இந்தியா கூட்டணியில் ஓவைசி கட்சி: ‘மதச்சார்பற்ற வாக்குகளில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க’ கூட்டணிக்கு லாலுவுடன் ஏ.அய்.எம்.அய்.எம். (AIMIM) கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இமான் தங்களுடைய கட்சியை மெகா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொய்யாகக் கூறுவதாக திமுக குற்றச்சாட்டு. ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கூட தமிழ்நாடு அரசு தனது நிதியை வழங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி இந்து:
* பல்கலைக்கழக சட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.
* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2569 பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தி டெலிகிராப்:
* ‘மோடி-நிதிஷ்-ஷா ஆகியோர் தங்கள் கைப்பாவை தேர்தல் ஆணையத்திடம் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குரிமை யைப் பறிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்’, லாலு பிரசாத் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*`மோடி ஜி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?`: ‘இந்தியா எல்லா மூலைகளிலும் எதிரிகளால் சூழப்பட்டுள்ளது’, பிரதமரின் வெளியுறவுக் கொள்கையை படு தோல்வி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்.
– குடந்தை கருணா