திருச்சி, ஜூலை 5- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர் களுக்கான பதவியேற்பு விழா 2.7.2024 (புதன்கிழமை) மதியம் 1.00 மணியளவில் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
எஸ்.காட்வின்
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்குப் பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியரும், 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமான எஸ்.காட்வின் வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து நடந்த நிகழ்வில், பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், அரசமைப்புச் சட்டக்குழு, பண்பாடு மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, நடனம், தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கும், மாணவர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், விளையாட்டு அணிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்றச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களுக்கும், மற்றும் மன்றங்களுக்கான பொறுப் பாசிரியர்களுக்கும் அவர்களுக்கான ‘பேட்ஜ்’ அணிவித்து சிறப்பு செய்தார்.
பள்ளியின் மாணவர் மன்றத் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவன் செல்வன் முகமது கைஃப் தலைமையில், துணைத் தலைவர். எக்ஸ்.ஆல்வின் ஜெரோன், மன்றப் பொறுப்பா ளர்கள் மற்றும் அனைத்து மாண வர்களும் பதவிப்பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் . நிகழ்வின் நிறைவாகப் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் கிருபா சங்கர் நன்றியுரை நவில, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.நிகழ்வினைப் பள்ளியின் இளங்கலை கணித ஆசிரியர் இ.அருண் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.