‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்து ஒன்றிய அரசின் யுபிஎஸ்இ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர், தற்போது முதன்மை தேர்வு எழுதுவதற்கான முழு ஆயத்தப் பணியில் உள்ளார்.
ஊக்கத் தொகை
தகுதித் தேர்வின் போது மாதம் 8000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவது மட்டும் அல்லாது, பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா பயிற்சி மயத்தில் 45 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்று வேளை உணவு, தங்கும் இடம், பயிற்சித் தேர்வு, ஊக்கத்தொகை என அனைத்தும் தனக்கு நம்பிக்கை அளிப்பதாக உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.
பயிற்சி மய்யம்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் வாய்ப்பாக இருப்பதாக கூறிய அவர், தன்னோடு 200க்கும் மேற்பட்டவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதன்மை தேர்வு எழுதுவதற்காக அண்ணா பயிற்சி மய்யத்தில் முழு நம்பிக்கையோடு இருப்பதாகக் கூறினார்.
சிகரத்தின் உச்சி
மேலும் தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதற்காக தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் மற்றும் புத்தகம் ஒன்று பரிசாக வந்ததாக தெரிவித்த தெரிவித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “சிகரத்தின் உச்சியை கண்டு விட்டோம்; சிகரத்தை அடைந்துவிடுவோம் – நான் முதல்வன் உதவியோடு” என்று நம்பிக்கையுடன் கூறி முதலமைச்சரின் வாழ்த்துக் கடிதம் மற்றும் அவர் அனுப்பிய நூலை பதிவிட்டுள்ளார்.