பீகார் மாநிலம் இந்த ஆண்டு வரும் அக்டோபரில் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திடீரென அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் விவரங்களை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஜூன் 25ஆம் தேதி இரவில் செய்தி நிறுவனம் மூலம் வெளியான இந்த அறிவிப்பில், ஜூலை 25க்குள் இந்த செயல்முறை முடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது பண மதிப்பிழப்பை விட மோசமான நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராட்டிரா, டில்லி, அரியானாவில் மோசடி?
டில்லியில் “வார்டு மெம்பர்” என்ற பெயரில் ஒருவர் 17 பேரின் பெயர்களை “இவர்கள் இங்கு வசிக்கவில்லை” எனக் கூறி மொட்டை கடிதம் அனுப்புகிறார். உடனே தேர்தல் ஆணையம் அந்த 17 பேரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறது. அந்த 17 பேரும் தேர்தல் ஆணையத்திடம் விசாரிக்கையில், “உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; மீண்டும் சேர்க்க புதிய படிவம் நிரப்புங்கள்” என பதிலளிக்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் கூட்டம் நடத்தி, “டில்லியில் இதுபோன்று ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மொட்டை கடிதத்தின் பெயரில் நீக்கப் பட்டனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டில்லியில் வென்றது; நீக்கப்பட்டவர்கள் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள்” என்றார்.
மகாராட்டிராவில்
வாக்காளர் எண்ணிக்கையில் குளறுபடி
வாக்காளர் எண்ணிக்கையில் குளறுபடி
“2024ஆம் ஆண்டு, மே (மக்களவை தேர்தல்) முதல் நவம்பர் (சட்டமன்றத் தேர்தல்) வரை அய்ந்து மாதங்களில் வாக்காளர் எண்ணிக்கை அய்ந்து லட்சம் உயர்ந்தது. 2019 முதல் அய்ந்து ஆண்டுகளில் 3.1 லட்சம் மட்டுமே அதிகரித்த நிலையில், 2024- அய்ந்து மாதங்களில் 5 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தனர்? பாஜக அதிக இடங்களை வென்று தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். வாக்காளர்கள் பலமடங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? வாக்குப் பதிவு முடிவு நேரமான 5 மணிக்குப் பிறகு அலைஅலையாக வந்து யாருக்காக வாக்களித்தனர்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார்.
பீகாரில் சூப்பர் திட்டம்:
இந்தியாவில் வெளிமாநிலங்களில் அதிகமாக வேலை பார்க்கும் மக்கள் பீகாரிகள்தான். 9 கோடி மக்களில் 3 கோடி பேர் வெளிமாநிலங்களில் உள்ளனர். ஜூன் 25 அன்று பகல் முழுவதும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைகள் வைத்தன. ஆனால், அன்று இரவு 7 மணிக்கு பி.டி.அய். செய்தி நிறுவனம், “ஜூலை 24க்குள் வாக்காளர் சான்றுகளை சமர்ப்பிக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என தேர்தல் ஆணையம் கூறியதாக செய்தி வெளியிட்டது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஊடகங்கள் ஏன் மவுனம்?
பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் ஒரு மிகப் பெரிய நிர்வாகப் பணி தொடங்கியுள்ளது. சுமார் 9 கோடி வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சிலரிடம் சான்றிதழ்கள் கேட்கப்படுவதுடன், அனைவரும் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதைக் காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் கூட கோரப்படுகின்றன.
இந்த அறிவிப்பு ஜூன் 25 இரவில் பி.டி.அய். செய்தி நிறுவனம் மூலம் வெளியானது. ஆனால், இது போன்ற முக்கியமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் டில்லியில் செய்தியாளர் சந்திப்பு மூலம் ஏன் வெளியிடவில்லை என்பது கேள்விக்குரியது. ஊடகங்களில் இதுபற்றி எந்தவொரு விவாதமும் இல்லை என்பது கவலையளிக்கிறது.
இது நாடு முழுவதும் நடைமுறைக்கு வருமா அல்லது பீகாரில் மட்டும் நடக்கிறதா என்பது தெளிவாகவில்லை. பீகாருக்கு அருகிலுள்ள உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இதற்கான அடையாளம் இல்லை. ஆனால் பீகாரில் மட்டும் இந்த நடவடிக்கை தீவிரமாக நடைபெறுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளை இதற்கென அழைத்து ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்தியா கூட்டணியின் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை நேரம் கேட்டோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதத்திற்குள் சரிபார்ப்பு முடிக்க வேண்டும் என கூறியுள்ளனர். 10 நாள்கள் கடந்தும் பதில் இல்லை” எனக் கூறினார்.
வாக்குரிமை பறிப்பு?
இந்த நடவடிக்கை, மக்களாட்சியில் குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய வாக்குரிமையை நேரடியாக பாதிக்கக்கூடியது. பி.எல்.ஓ.க்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 உத்தரவுக்குப் பிறகு வந்ததா அல்லது அதற்கு முன்பே தயாரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறி. பி.எல்.ஓ.க்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்பட்டது என்பதும் தெளிவாகவில்லை.
பீகாரில் பெரும்பாலான மக்களிடம் ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் உள்ளன. ஆனால், விண்ணப்ப படிவத்தில் இவை அங்கீகரிக்கப்படவில்லை. பிறப்புச் சான்றிதழ், பள்ளிச்சான்றிதழ் போன்றவையே கோரப்படுகின்றன.
ஜூன் 30 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “60 விழுக்காடு வாக்காளர்களுக்கு சான்றிதழ்கள் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளது. “2003 வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், அந்த விவரத்தை மட்டும் சரிபார்த்து படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆனால், 2003 பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 1987க்கு முன் பிறந்திருந்தால், பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்?
பீகார் தலைமை தேர்தல் அதிகாரியின் எக்ஸ் (X) பக்கத்தில், பல மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் மறுஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெறும் ஒளிப்படங்கள் பதிவாகியுள்ளன. இது, இந்த நடவடிக்கை முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
8 கோடி வாக்காளர்களுக்கான
புதிய படிவங்கள்:
புதிய படிவங்கள்:
n பீகாரில் உள்ள 8 கோடி வாக்காளர்களுக்கு புதிய படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
n அனைவரும் அவற்றைப் பூர்த்தி செய்து, ஒளிப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
n BLO-க்கள் வீடு வீடாகச் சென்று இந்தப் படிவங்களை வழங்குகின்றனர்.
n ஷேக்புரா மாவட்ட ஆட்சியர் வைஷாலி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.
விளம்பரங்கள் மற்றும்
வாக்காளர்களின் சிரமங்கள்
வாக்காளர்களின் சிரமங்கள்
n பீகார் தொலைக்காட்சியில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரங்களில், வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் படிவங்களை நிரப்புவதாகக் காட்டப் படுகிறது.
n ஆனால், உண்மையில் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
4.76 கோடி பேருக்கு
புதிய சான்றிதழ்கள் தேவை
புதிய சான்றிதழ்கள் தேவை
n பீகாரில் உள்ள 4.76 கோடி வாக்காளர்கள், ஒரு மாதத்திற்குள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்.
n பின்னர், அவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படும். இதற்காக தனியாக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் இடம்பெயர்வு மற்றும்
வாக்களிப்பு சதவீதம்
வாக்களிப்பு சதவீதம்
n 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட ஆய்வில், 3 கோடிக்கும் மேற்பட்டோர் வேறு மாநிலங்களில் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.
n இதனால்தான் பீகாரில் வாக்களிப்பு சதவீதம் குறைவாக உள்ளது.
எதிர்கட்சிகளின் கேள்விகள்
n வாக்காளர் பட்டியலில் உள்ள சில குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக, 8 கோடி வாக்காளர்களின் ஒவ்வொரு விவரத்தையும், பிறப்புச் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டுமா?
– இது தேர்தல் ஆணையத்தின் திட்டத்தில் ஏற்கெனவே இருந்ததா?
n இருந்திருந்தால், டில்லியில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது முக்கியமான விவாதமாக இருந்திருக்க வேண்டியதல்லவா?
n தேர்தல் நடத்துவதற்கான மிகப் பெரிய திட்டமாக இது இருக்கும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டியவைதான்.
n ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்:
திட்டமா? திடீர் முடிவா?
திட்டமா? திடீர் முடிவா?
இவ்வளவு பெரிய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து ஊடகங்களில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை. பாட்னாவில் எந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தால், அது மிகவும் ஆட்சேபணைக்குரியது.
மாறாக, தேர்தலுக்கு முன் திடீரென இந்த நடவடிக்கையைத் தொடங்கியிருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission) ஏன் இப்போது இந்த அவசரம் ஏற்பட்டது? என்பது கேள்விக்குரியது. சுமார் 3 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
அநியாய அழுத்தம்
n பீகாரில் சட்டமன்றத் தேர்தல் அக்டோபரில் நடைபெறவிருக்கிறது.
n தற்போது 12 மாவட்டங்கள் வெள்ளக்காடாக உள்ளன; ஆகஸ்ட் இறுதிவரை இந்த நிலையே தொடரும்.
n ஆகவே, மக்கள் நேரில் பங்கேற்க இயலாத சூழலில், ஜூலை 26க்குள் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அநியாயமான அழுத்தமாக இருக்கிறது.
BLO-க்களின் மூன்று முறை வருகை
n தேர்தல் ஆணையம் கூறுவது: BLO-க்கள் மூன்று முறை வாக்காளரின் முகவரிக்கு செல்வார்கள்.
n குறிப்பிடப்பட்ட முகவரியில் வாக்காளர்கள் இல்லையெனில், அவர்களின் பெயர் நீக்கப்படும்.
n வாக்காளர்கள் மறுஆய்வில் நேரில் பங்கேற்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்?
n வேலை தேடி வெளியூர் சென்றவர்கள்
n கூலித் தொழிலாளர்கள், காவலாளிகள், வீட்டு வேலைக்காரர்கள்.
n பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய வேலை பார்க்கும் புலம்பெயர்ந்தோர்.
பீகாரில் மட்டும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் முகவரியில் இல்லாததால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுகிறது.
ஆவணக் குழப்பம்
n முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென் கூறுகிறார்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை மட்டும் போதாது என்பது வாக்காளர்களுக்கு குழப்பம் மற்றும் அலைச்சலை ஏற்படுத்தும்.
n ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அடையாள ஆவணங்கள் செல்லாதவை என்றால், எந்த புதிய ஆவணங்கள் தேவை என்பதைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இல்லை.
குடியுரிமைச் சான்றுகள் கேட்கப்படுவது ஏன்?
பீகாரில், குறிப்பாக வடமத்திய மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளம் காரணமாக, மக்கள் தங்கள் ஆவணங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், ஆதார் மற்றும் குடும்ப அட்டையைத் தவிர, பலரிடம் வேறு ஆவணங்கள் இல்லை. இந்த சூழலில், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை
n வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவை மட்டும் போதாது என்னும்போது:
n 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்:
n பிறப்புச் சான்றிதழ்
n அரசு ஊழியர் அடையாள அட்டை
n நில உரிமைச் சான்றிதழ் / பட்டா
n பத்தாம் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்
n வசிப்பிடச் சான்றிதழ்
ஆகியவை அதில் முக்கியமானவை.
முக்கியமான கேள்வி
ஓட்டுநர் உரிமம், ஆதார், வாக்காளர் அட்டை போன்ற முக்கியமான ஆவணங்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இது NRC (தேசிய குடிமக்கள் பதிவேடு)-க்கு ஒரு மறைமுகத் தொடக்கமா?
பூர்ணியா மாவட்ட தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி, இந்த ஆவணங்கள் அனைத்தும் குடியுரிமை நிரூபணத்திற்கானவை. மேலும், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்றது; அதில், “11 அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்ஷுல் குமார் (மாவட்ட ஆட்சியர்): “உங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும்” எனத் தெளிவாகக் கூறுகிறார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
இது “பின்கதவு வழியாக திணிக்கப்படுகின்ற NRC” எனக் கூறப்படுகிறது. குடியுரிமைச் சட்டம் 1955இன்படி, 1987 ஜூலை 1-க்கு முன் பிறந்தவர்கள் இந்தியக் குடிமகன்கள். ஆனால், தற்போது, அந்த அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பது கேள்விக்குரியது.
n பீகார் தேர்தலுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விரிவடையலாம் எனக் கூறப்படுகிறது.
n வாக்குரிமை உள்ள எளிமக்களின் உரிமையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
முக்கிய கவலைகள்
n ஒரு மாதத்திற்குள் 8 கோடி வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்வது சாத்தியமா?
n நம்மோடு வேலைபார்க்கும் பீகார் சகோதரனின் குடியுரிமையே பறிபோகும் அபாயம் உள்ளது. – நாளை அது நமக்கும் நிகழலாம். அது எந்த வடிவில் வரும் என்பது தான் சிரமம்.