தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வது தான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.
(‘விடுதலை’ 11.10.1948)