ஆண்டிமடம், ஜூன் 17 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 13.6 .2023 செவ்வாய் அன்று ஆண்டிமடம் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகத்தில் மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது.
ஒன்றியதலைவர் இரா. தமிழர சன் கடவுள்மறுப்பு கூறஒன்றிய செயலாளர் தியாக முருகன் வர வேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட அமைப் பாளர் இரத்தின. ராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர் சி.காம ராஜ், மாவட்ட துணைத்தலைவர் இரா.திலீபன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.
மாவட்ட இளைஞரணி தலை வர் க.கார்த்திக், ஆண்டிமடம் ஒன் றிய அமைப்பாளர் கோ. பாண்டி யன், துணைச் செயலாளர் த.கு. பன்னீர்செல்வம், துணைத் தலை வர் இரா.எ. இராமகிருஷ்ணன், நகர செயலாளர் டி.எஸ்.கே.அண் ணாமலை, நகர அமைப்பாளர் பட்டுசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா.பாலமுருகன், சமத்துவபுரம் ரவி, சிந்தாமணி ராமச்சந்திரன், ரெட்டி தத்தூர் செல்வரங்கம், ஆண்டிமடம் கோ. சுந்தரவடிவேல், ப. சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங் கேற்று கருத்துகளை எடுத்துக் கூறினர். மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன் ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.
ஜாதி ஒழிப்பிற்காக சட்டத்தை எரித்த வீரர் தத்தனூர் சா.துரைக் கண்ணு மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கி றது. திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை சிறப்பாக நிறை வேற்றப் பாடுபடுவதனவும், செந் துறையில் நடைபெறும் பெரியா ரியல் பயிற்சி முகாமிற்கு அதிக இளைஞர்களை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்வதெனவும், வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒன்றியம் முழுவ தும் கருத்தரங்கங்கள், தெருமுனை கூட்டங்களை நடத்தி புதிய இளை ஞர்களை இயக்கத்தில் இணைப்ப தெனவும்,கிளைக் கழகம் தோறும் கழகக் கொடியினை ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஆண்டிமடத்தில் நடைபெற்ற தமிழர்தலைவர் பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இக் கூட்டம் நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.
ஆண்டிமடம் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக செல்வரங் கம் நியமிக்கப்பட்டார்.