சென்னை, ஜூலை4- “மற்றவர்களை பரிவு, தெளிவு, மீளும் தன்மை யுடன் கவனித்துக் கொள் வதற்கு மன நலனே மருத் துவ நிபுணர்களுக்கு உத வும் அடித்தளம்”, என்று பொத்தேரி வளாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி முதுகலை மாண வர்களுக்காள மன நலப் பயிலரங்கின் தொடக்க விழாவில் கூடுதல் பதிவாளர் டாக்டர் டி.மைதிலி கூறினார். நிலையான மனம், உணர்வு சார்ந்த நல்வாழ்வுக்கான வலுவான தகவல் தொடர்பு பாலங்களை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்த அமர்வு மீண்டும் வலியுறுத்தியது.
பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேனிஸ் சேவியர், டாக்டர் சுஹாஸ் சந்திரன் ஆகியோர் இந்தப் பயிலரங்கை நடத்தினர். மருத்துவர்கள் நலவாழ்வில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் ஒத்துழைப்பு, வெளிப்படையான கலந்துரை யாடல் சூழலை பங்கேற்பாளர்களிடையே பயிலரங்கு உருவாக்கியது.
இந்தப் பயிலரங்கை டீன் டாக்டர் நிதின் எம். நகர்கர் தொடங்கி வைத்தார். குழு விவாதங் கள், சிந்தனை அமர்வுகள், நேரடிச் செயல்பாட்டில் பங்கேற்பு ஆகியவை இதில் இடம்பெற்றன.
முதுகலை மாணவர்க ளுக்கான நல்வாழ்வுத் திட்டங்களின் முக்கி யத்துவத்தையும் சிறப்பு விருந்தினர்கள் எடுத் துரைத்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட அனை வரின் முயற்சிகளையும் பாராட்டினர். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். வெங்கட் ராமன், மனநலத் துறைத் தலைவர் டாக்டர் ஆர். அருள் சரவணன் ஆகி யோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.