வன்கொடுமை துன்புறுத்தலால் 16 விழுக்காடு பெண்கள் பாதிப்பு

2 Min Read

சென்னை, ஜூன் 17-  உலக முதி யோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளை முன்னிட்டு ‘ஹெல்பேஜ் இந்தியா’ தயாரித்த ‘பெண்கள் மற்றும் முதுமை அறியாமையா அல்லது அதிகாரமா’ என்ற தலைப்பிலான அறிக்கை சென்னை எழும்பூரில் வெளி யிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

இந்தியாவில் பாலின விகிதம் 948/1000. ஆனால், முதியோருக்கான பாலின விகிதம் 1065/1000. இதன் மூலம் முதுமைப் பருவத்தில் பெண் களே அதிகம் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முதுமைக் காலத்தில் ஆண்களைவிட பெண் கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படு கின்றனர். இதனால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர்.  இந்திய மக்கள் தொகை 2021-இன் படி பெண்கள் 66 கோடிபேர் உள்ளனர். இதில்  வயதான பெண்கள் 7 கோடி பேர் உள்ளனர்.  2031 இல் மக்கள் தொகையில் 72 கோடி பெண்கள் இருப்பார்கள். இதில் வயதான பெண்கள் 10 கோடிக்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது.  54 விழுக்காடு பெண்கள் இன்றளவும் கல்வியறிவில்லாமல் உள்ளனர். 75 விழுக்காடு பெண்கள் எந்த சேமிப்பும் இல்லாமலும், 66 விழுக்காடு பெண்கள் எவ்வித சொத்துகளும் இல்லாமல் பொரு ளாதார ரீதியாக பிறரை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். 

தமிழ்நாட்டில் வன்கொடுமை 

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வயதான  பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடு மைகள் 16 விழுக்காடு உயர்ந் துள்ளது. உடல்ரீதியான வன்முறை 52 விழுக்காடும், வார்த்தை வன் முறை 51 விழுக்காடும் நிகழ்த்தப் படுகிறது. 

இது  போன்ற வன் முறைகளை பாதிக்கப்பட்ட வரின் மகன் 33 விழுக்காடும், உறவினர்கள் 33 விழுக்காடும், 12 விழுக்காட்டை மருமகள்களும் நிகழ்த்துகிறார்கள்.  பாதிக்கப்பட்ட வயதான பெண் களில் 20 விழுக்காட்டினர் தங் களுக்கான சட்டங்கள் மற்றும் குறைதீர் மய்யங்கள் குறித்த விழிப் புணர்வின்றி காணப்படுகின்றனர்.  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையை சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா  வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் பெற்றுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *