தந்தை பெரியாரின் சிறப்பு சொற்பொழிவு
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் சரசுவதி விலாஸ் திரையரங்கில் நடந்த வட ஆற்காடு மாவட்ட 3 ஆவது ஆதித்திராவிட மகாஜன மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய நாள் இன்று (04-07-1937).
மருத்துவ அறிவியலாளர்
மேரிகியூரி நினைவு நாள் இன்று (4-7-1934)
புற்றுநோயின் கோரப்பிடியிலி ருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நாம் நினைவுகூரவேண்டும். உலகத் திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழி வகுத்தது.
மேரி கியூரி, 1903 ஆம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். தம் கணவர் மறைவுக்குப் பிறகு 1911ஆம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இப்படி இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றதும் ஒரு வரலாற்றுச் சாதனையே.
தமது ஆய்வுகளுக்காக மேரி கியூரி யுரேனியம், பொலோனியம், ரேடியம் என்னும் தனிமங்களுடன் சோதனை செய்தார். இதன்விளைவாகக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் நோய்வாய்ப் பட்டு, 1934 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் நாள் மறைந்தார்.