சென்னை, ஜூன் 17– மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO) சார்பில் தமிழ்நாடு ஆளு நரைக் கண்டித்து 16.6.2023 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப் பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல் கலைக் கழகங்களில் துணை வேந் தர்களை நியமிப்பதில், அரசியல மைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந் தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல் கலைக்கழகங்களில் செயலற்ற தன் மையை உருவாக்குதல் என தமிழ் நாடு உயர்கல்வித்துறையில் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருபவரும், தமிழ்நாடு பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் கொண்டுவரப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங் காமல் கிடப்பில் போட்டு வருப வருமான தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும்,
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் எதேச்சதிகாரத்துடன் மாநிலங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், நீட்,நெக்ஸ்ட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளைத் திணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு தற்பொழுது மருத்துவக் கல் வியில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க் கைக்கான மருத்துவக்கலந்தாய்வி லும் மூக்கை நுழைத்து, ஒட்டு மொத்தமாக ஒரே கலந்தாய்வு என்று கூறிக்கொண்டு மாநிலங் களுக்கான இடங்களை அபகரிக் கத் திட்டம் போட்டு செயல்படுத்த முனைந்துள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் பல்வேறு மாண வர் இயக்கங்களை ஒருங்கிணைத்து செயலாற்றி வரும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு கண்டன ஆர்ப்பாட் டத்தை எழுச்சியுடன் நடத்தியுள் ளது.
மாணவர் இயக்கங்களின் கூட் டமைப்பு-தமிழ்நாடு ஒருங்கிணைப் பாளர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், இந்திய மாணவர் சங்க செயலாளர் நிருபன்சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில், கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில மாணவர் கழக துணை செயலாளர் சென்னை செ.பெ.தொண்டறம், மாநில மாணவர் கழக துணை செயலாளர் கோபி த.சிவபாரதி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் செய்யாறு வெ. இளஞ்செழியன், மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் நாகை மு.இளமாறன், பல்கலைக் கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர் விருதாச்சலம் ஆ. அறிவுச்சுடர், சட்டக்கல்லூரி மாண வர் கழக துணை அமைப்பாளர் அரியலூர் எஸ்.எஸ். திராவிட செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அரியலூர் அறிவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நாகை நாத்திக பொன்முடி, திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன்,கோபி வெற்றிமணி, அரியலூர் இன்பத் தமிழன், ஒக்கநாடு மேலையூர் க.பரணிதரன்,அரியலூர் சத்திய ராஜ், தஞ்சை சந்துரு, வேல்முருகன், யுகேஷ், வட சென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, வடசென்னை நா.பார்த்திபன், கூடுவாஞ்சேரி மா.இராசு, ஆவடி மாவட்ட திராவிட கழக துணை செயலாளர் க. தமிழ்ச்செல்வன் தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ், சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. தலைவர் பி.சி. ஜெய ராமன், ஓசூர் வழக்குரைஞர் அப்ரிடி, நாகர்கோயில் இசைசெல்வி, சந்திர சேகரன், அறிவொளி காணொலி பழ. சேரலாதன், பழவந்தாங்கல் தமிழினியன், க.கலைமணி, உடுமலை வடிவேல், கமலேஷ், ஓட்டுநர் மகேஷ் உள்பட பலர் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.