17.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் வன்முறை பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மேனாள் டி.ஜி.பிக்கு மூன்றாண்டு சிறை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கண்டு அச்சமுறும் மோடி அரசு பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு என நிதிஷ் குமார் தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதி அடிப்படையிலான பவன்களுக்கு நிலம் ஒதுக்குவது பிற்போக்கான நடைமுறை என தெலங்கானா உயர்நீதிமன்றம் தெலங்கானா அரசுக்கு குட்டு.
தி இந்து:
* ‘இந்துத்வாவைப் பொறுத்தவரை, கடந்த காலம் மட்டுமே பொருத்தமானது’ என்கிறார் வரலாற்றாசிரி யர் ரொமிலா தாப்பர்.
தி டெலிகிராப்:
* மணிப்பூர் வன்முறை, காரணமாக இப்போது ‘நாடில் லாதவன்’ என ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எல்.நிஷிகாந்த் சிங் வேதனை.
* 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தகவல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு.
* நீட் தேர்வு எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஒடிசாவி லும் உள்ளது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னிடம் கூறியதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
– குடந்தை கருணா