கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.7.2025

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நேரில் முறையீடு. இரண்டு கோடி வாக்காளர்கள் விடுபடும் அபாயம், காங்கிரஸ் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடி ஆட்சியில் நேர்ந்த அவலம்; கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு, ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.

* உள்துறை அமைச்சகத்தின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ரகசிய குற்ற விசாரணைகளுக்கு ஒட்டுக் கேட்பதை சட்டம் அனுமதிக்காது என்று உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:  ஜூலை 21ஆம் தேதி முதல் ஆக. 21ஆம் தேதி வரை நடைபெறும்.

* சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி;  வாக்காளர் பட்டியல் திருத்தம் மாநிலத்தில் ஏழைகளின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் என ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் காட்டம்.

* ஓரணியில் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கம். இது ஒரு தேர்தல் பிரச்சாரம், உறுப்பினர் இயக்கம் மற்றும் ஒன்றிய அரசின் துரோகங்களை விளக்கும் முயற்சி ஆகியவற்றின் கலவையாகும் என பேச்சு.

தி டெலிகிராப்:

* அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவ மோடி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி தனது ஒளிப்படங்களை உரப் பைகளில் அச்சிடுகிறார், மறுபுறம், விவசாயிகள் ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை’ சார்ந்து இருக்கிறார்கள்.

 – குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *