திருச்சி, ஜூலை 3– 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்று மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர் களுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நமது பள்ளியில் 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவி அ.ஷவரீதா என்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.20,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.