திருச்சி, புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான, சதுரங்கம், பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.
இதில் மாவட்ட அளவிலான பூப்பந் தாட்டப் போட்டியில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தார். வெற்றி பெற்ற மாணவி களைப் பள்ளித் தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் பாராட்டி மகிழ்ந்தனர்.