தமிழ்நாடு முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அய்ந்து மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

2 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 17-  தமிழ்நாடு முன் னேற்றத்திற்கான முத்திரை திட்டங் களை 5 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும்  என்று  அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முத்திரை திட்டங் கள் குறித்த முதல்கட்ட ஆய்வு கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (16.6.2023) நடந்தது.

இதில் முதலமைச்சர் பேசியதாவது: பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படும் சில சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதித்துள்ளோம். 

இது போன்ற ஆய்வு கூட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி, பல்வேறு துறைகளிலும் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மிக முக்கிய மானதாக அடையாளம் காணப்பட்ட, அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் பட்டுவரும் திட்டங்களை ‘அரசின் முத்திரை திட்டங்கள்’ என வகைப் படுத்தியுள்ளோம். 

இந்தத் திட்டங்களை விரைந்து முடிக்க உங்கள் அனை வரையும் ஏற்கெனவே கேட்டுக் கொண்டேன்.

இதன் 2ஆம் கட்டமாக, அந்தத் திட்டங்களோடு மேலும் பல புதிய திட்டங்களையும் இணைத்து, தற் போது 11 துறைகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்துள்ளது.

கடந்த ஆய்வு கூட்டத்துடன் ஒப் பிடும்போது, பெரும்பான்மை திட்டங் களில் சிறப்பான முன்னேற்றம் இருந்தாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர் பார்த்த காலகட்டத்துக்கு முன்பே செயலாக்கத்துக்கு வந்துவிடும். 

சென்னை கிண்டியில் கடந்த 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவ மனை, மதுரை மாநகரில் விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கி உள்ள கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்களே இதற்கு உதாரணம்.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றின் செயலாக் கத்தை நான் தொடர்ந்து உங்களுடன் விவாதித்ததால், தமிழ்நாடு இன்று தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய அளவில் முதல் இடம் பெறுவது மட்டுமின்றி, பன்னாட்டு அளவிலும் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதே நம் இலக்கு.

இத்திட்டங்கள் விரைவாக முடிக் கப்படாவிட்டால், மிக விரைவில் வரவுள்ள பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அத்திட்டங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும். 

பருவ மழைக்கு பிறகு பார்த்துக் கொள்ள லாம் என்றால், அடுத்துவரும் நாடாளு மன்ற தேர்தலுக்கான நடத்தை  விதிகள் போன்ற சூழல்களால் பணிகளின் முன்னேற் றம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே,  சரியான திட்டமிடுதலு டனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகவேண்டும்.  இன்னும் 2 மாதங் களில் அடுத்த ஆய்வு கூட்டம் நடைபெறும் போது,  நாம் விவாதித்த பெரும்பாலான திட்டங் களில், சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *