‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 அய்யா மதுரைக்கு வரும்போது எங்கள் குடும்பம் சார்பாக வழங்குவோம்
எங்கள் குடும்பத் தலைவரும், பாசத்திற்குரியவருமான ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு வணக்கம்.
மதுரை இளமதி முருகேசனின் மகன் செல்வி. கவின்மதி அன்புடன் எழுதிக் கொள்வது,
இங்கு நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். அதுபோல் அங்கு தாங்களும், பாட்டியும் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க விரும்புகிறேன்.
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கான தங்களின் நிதி அறிக்கையை ‘விடுதலை’ நாளிதழில் படித்தோம். தந்தை பெரியாரின் தத்துவத்தாலும், தங்களின் வழிகாட்டுதலாலும் இன்று எங்கள் குடும்பம் நல்ல நிலையில் உள்ளது. எங்களின் நன்றியை காட்ட தாங்கள் மதுரைக்கு வரும்பொழுது லட்சம் ஒன்றுக்கான காசோலையை எங்களின் குடும்பத்தின் சார்பாக தங்களிடம் அளிக்க உள்ளோம். எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழர் தலைவர் தாத்தா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
– கவின்மதி, மதுரை