சென்னை, ஜூலை 3– தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
கோவையின் சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம், சேலம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூரில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் பர்கூர் ஆகிய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேனியின் பழனிசெட்டிபட்டி, மேலசொக்கநாதபுரம், கன்னியாகுமரியின் குலசேகரம், இடிகரை, கோவை செட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர், திண்டுக்கல் அகரம், செவுகம்பட்டி, தென்காசி மேலகரம், ராமநாதபுரம் முதுகுளத்தூர் உள்ளிட்டப் பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி வெள்ளிமலை, புத்தாளம், மண்டைக்காடு, ஆத்தூர், கோவையின் ஆலந்துறை, ஈரோட்டின் எலாத்தூர், தேனியின் புத்திபுரம், சேலத்தின் நங்கவல்லி உள்ளிட்டப் பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலுடனான போரில்
935 பேர் பலி : ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலுடனான போரில் 935 பேர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. 2 நாடுகளுக்கும் இடையே 12 நாள்களாக போர் நீடித்தது. இதில் முதலில் தங்கள் நாட்டுத் தரப்பில் 627 பேர் பலியானதாக ஈரான் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 935 ஆக உயர்ந்து உள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. இதில் 38 குழந்தைகள், 132 பெண்களும் அடங்குவர் எனவும் ஈரான் அரசு கூறியுள்ளது. பலியான ராணுவ வீரர்கள் விவரம் வெளியாகவில்லை.