ஓர் அன்பான வேண்டுகோள் ! 16.06.2023 அன்று கோவையில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நமது ஆசிரியர் மட்டும் பேசிய காட்சிப் பதிவை (வீடியோ) அனுப்ப வேண்டும்.. அதுமட்டுமல்ல! அங்குள்ள மேடையில் அமர்ந்த தலைவர்கள் சொல்லாத பல செய்திகளை ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள். உதாரணத்திற்கு மக்களைவைத் துணைத் தலைவர் பதவியை நிரப்பாமலே பி.ஜே.பி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது. ஏனெனில் மக்களவைத் துணைத் தலைவர் பதவி என்பது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்குத்தான் என்று சட்ட விதி இருக்கிறது என்பது சாமானிய மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை …
ஆகையால் இந்தக் காட்சிப் பதிவை தயவு கூர்ந்து எனக்கு அனுப்புங்கள்… பகிர வேண்டும்.
– செ.கண்ணன்
மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம் , தேனி.