முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராகத் தொண்டு புரியும் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர்களுக்கு இன்று (2.7.2025) 103ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகும்.
வேலூர் பரமத்தி அருகே உள்ள பொத்தனூரில் பிறந்து, மாணவப் பருவம் தொட்டே தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருபவர். ‘க.ச.’ என்று அனைத்துக் கட்சியினரும், அனைத்துத் தரப்பினரும் கண்ணியத்தோடும், மரியாதை கலந்த பாசத்தோடும் அவரிடம் பழகுவார்கள்.
அண்மையில் 27.6.2025 அன்று திருச்செங்கோடு நிகழ்ச்சியில் சந்தித்தபோது தொடக்கக் காலத்தில் இருந்த அதே மகிழ்ச்சி, தொண்டறத் தூய்மை பொங்கும் வகையில் அவர்களை மேடையில் அனைவரும் வாழ்த்தினோம்!
நல்ல உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் உள்ள அவர்கள் அனைவரும் ஏற்று மதிக்கப்படக் கூடிய மாமனிதர் ஆவார். மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, ெகாள்கை வழிகாட்டியாகத் திகழ வேண்டும்.
அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.7.2025
குறிப்பு: தொலைப்பேசியில் பொத்தனூர்
க. சண்முகம் அவர்களுக்கு ஆசிரியர், மோகனா அம்மையார், வீ.அன்புராஜ் ஆகியோர் வாழ்த்துக் கூறினர்.