டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஹிந்தித் திணிப்புக்கு எதிரான மகாராட்டிரா போராட்டம், திமுக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளது, அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அடிக்கடி வானில் பறந்து செல்லும் பிரதமர் மோடி; நாட்டில் பிரச்சினைகள் வெகுவாக இருக்கின்றன, மணிப்பூர் வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப் பேச்சு, இவற்றுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவே செல்கிறார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற பணி நியமனத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பதவி உயர்விலும் சலுகை
* மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு: பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
* கடவுள் முருகன் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதற்காக அண்ணாமலை மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (1.7.2025) திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பாஜக எம்.பி.க்கள் மேதா பட்கர் மற்றும் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் ஆகியோர் குழுவின் முன் ஆஜராக அழைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
* பூரி கூட்ட நெரிசல் மூன்று பேர் உயிரிழப்பு: விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம், மோசமான கூட்டக் கட்டுப்பாடு, காவல்துறையினர் இல்லாததுதான் காரணம் என்று இறந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு
தி இந்து:
* மகாராட்டிரா தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து; வெற்றிக் கொண்டாட்டம் என தாக்கரே கட்சிகள் அறிவிப்பு.: பிரிக்கப்படாத சிவசேனாவில் இருந்து பிறந்த பிரிந்த உறவினர்களும் போட்டி பிரிவுகளின் தலைவர்களுமான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான இரண்டு சர்ச்சைக்குரிய அரசாங்கத் தீர்மானங்களை (GRS) மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, ‘மராத்தி விஜய் திவாஸ்’ கொண்டாடும் வகையில் விழா ஏற்பாடு.
* மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தம் அல்ல. இது, பொருளாதார அநீதிக்கும், பெரிய நிறுவனங் களுடனான கூட்டணிக்குமான ஒரு மிருகத்தனமான கருவி என ராகுல் காட்டம்.
* மத்திய பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர் பதவிகள் இன்னும் காலியாக உள்ளன: ஏப்ரல் 2021 இல் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பதவிகளில் குறிப்பிடத்தக்க காலியிடங்கள் இருந்தன: எஸ்சிக்களுக்கு 2,389, எஸ்டிக்களுக்கு 1,199 மற்றும் ஓபிசிக்களுக்கு 4,251 என்கிறார் ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் எஸ். வான்கடே
தி டெலிகிராப்:
* ஜே.என்.யு. மாணவன் ஒன்பது ஆண்டுகளாக காண வில்லை; நஜீப் அகமதுவின் தாயார் செவ்வாயன்று தனது மகனைக் கண்டுபிடிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகக் கூறினார். என் கடைசி மூச்சு வரை போராடுவேன்’ என சபதம்.
– குடந்தை கருணா