மதுரையில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்த வெளி மாநாட்டை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு மாவட்ட துணைச் செயலாளர்க.சிவா ஒருங்கிணைப்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், இரா.திருப்பதி, இராலீ.சுரேஷ், தனுஷ்கோடி, பெத்தானியாபுரம் பாண்டி, பேக்கரி கண்ணன், மு.மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பா.காசி, அமைப்பாளர் ச.வேல்துரை, முரளி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் சீ.தேவராஜபாண்டியன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக மதுரை கடைத்தெருக்களில்துண்டறிக்கைப் பரப்புரை,நன்கொடை திரட்டும் பணியை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த கடைவீதி பரப்புரையை நடத்துவதாக தெரிவித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜா, வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் தொண்டறப் பணியில் ஈடுபடும் கழகத் தோழர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – அழைப்பிதழ் வழங்கல்
6.7.2025 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி பந்தலடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா குடி அரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா திறந்த வெளி மாநாடு மற்றும் வி.சி.வில்வம் எழுதிய கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்
மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்து மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மன்னை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். அன்பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன் ஆகியோர் மாநாட்டு அழைப் பிதழை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.
தஞ்சை பி.ஜி.இராஜேந்திரன் பிறந்தநாள் திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்டத்தலைவர் ,தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலைவர் பி.ஜி.இராஜேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கழக சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.