கருத்து சுதந்திரம் குறித்து பா.ஜ.க.வினர் பேசலாமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜூன் 18 அவதூறு பரப்புவதற்கு ஆதரவாக களமிறங்கும் பாஜவினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசலாமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 

பா.ஜ.க. மாநில செயலாளர் அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கவலைப் படுகிறார். ஆனால் உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஆய்வு செய்த எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஊடகச் சுதந்திரம் குறித்து 180 நாடுகளில் ஆய்வு செய்து இதில் 150வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?. சமூக ஊடங்களை அவதூறுகளையும், பொய் புனைச்சுருட்டுகளையும் பரப்பும் இடமாகவே பாஜவினர் பயன்படுத்துகின்றனர். 

ஒரு புகாரின் பேரில் தமிழ்நாடு காவல்துறை எடுத்த சரியான சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்காக இவ்வளவு தூரம் பாஜ தலைவர்கள் துடிக்கிறார்கள். அதே சமயம் ஒன்றிய பாஜ அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டு தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *