தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மய்யத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள்:
பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 1
தகுதி: சமூக அறிவியல், வாழ்க்கை அறிவியல், ஊட்டச்சத்து, மருத்துவம், சுகாதாரம், மேலாண்மை, சமூகப் பணி, கிராமப்புற மேலாண்மை ஆகிய ஏதொவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.35,000
பணி: பாலின சிறப்பு நிபுணர் – 1
தகுதி: சமூகப் பணி துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.21,000
பணி: நிதிகல்வியறிவு வல்லுநர் – 1
தகுதி: பொருளாதாரம் அல்லது வங்கியியல் துறை சார்ந்த பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.21,000
பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம் – 1
தகுதி: கணினி சார்ந்த துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இணையத்தில் தரவுகளை ஆவணப்படுத்தல், மாநில அல்லது மாவட்ட அளவில் விவசாயிகள் குறித்து அரசு அல்லது அரசு சாரா அல்லது அதன் அடிப்படையிலான நிறுவனங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தலில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.20,000
பணி: பல்நோக்கு உதவியாளர் – 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.12,000
விண்ணப்பிக்கும் முறை: கோயம்புத்தூர் மாவட்ட https://coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டம், அறை எண் 5, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர். தொலைபேசி எண். 0422 – 2305156
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 20.7.2025