சென்னை செம்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார், அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை,ஜூன்18 – சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி சார்பாக 10-.06.-2023 அன்று, செம்பாக்கம் காமராஜபுரத்தில் நடை பெற்ற பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாள் முப் பெரும் விழாவாக ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக கொண்டாடப் பட்டு வருகிறது. முந்தைய ஆண்டு களை போலவே இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

விழாவில் சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன் தலைமையில் கழகத் தோழர்கள், தோழமை கட்சியினர், கழக ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித் தனர். 

பெரியார் பெருந்தொண்டர் இரா.இரத்தினசாமி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியது முத்தாய்ப்பாக அமைந்தது.

மாவட்ட செயலாளர் ஆ.விஜய் உத்தமன் ராஜ் வரவேற்றார்.

விழாவின் தலைப்புகளில் ஒன் றான வைக்கம் போராட்ட வெற்றியின் சிறப்புகளையும் இணைத்து திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, தோழமைக் கட்சியினர் மற்றும் கழகத் தோழர்கள் உரை நிகழ்த்தினர். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தனர்.   

மு.நித்தியானந்தம் சோழிங்க நல்லூர் மா. இ. தலைவர்

கே.தமிழரசன், சோழிங்க நல்லூர் மா. இ. செயலாளர்

வி. பன்னீர்செல்வம், தலைமைக் கழக அமைப்பாளர்

தே.செ.கோபால், தலைமைக் கழக அமைப்பாளர்

இரா.சிவசாமி, சென்னை மண் டல கழக இ. அ. செயலாளர்

சண்முகப்ரியன், மண்டல கழக இ. செயலாளர்

தமிழினியன், மாவட்ட கழக துணை செயலாளர்

தி.இரா.இரத்தினசாமி, கழக காப்பாளர்

சண்முக சுந்தரம், மாநில ப.க. துணை தலைவர்

ஆனந்தன், சோழிங்கநல்லூர் மா.ப.க.தலைவர்

பி.சி.ஜெயராமன், சோழிங்க நல்லூர் மா.ப.க. அமைப்பாளர்

எஸ்.தேவி சக்திவேல், மாவட்ட கழக மகளிரணி தலைவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சா.மதன்குமார் (அண்ணல் அம்பேத்கர் அறிவு பள்ளி, வேலூர்) சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இவ்விழாவில் தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ்,  சோழிங்க நல்லூர் மா.ப.க.செயலாளர் ஜெ.குமார், செம்பாக்கம் நகர கழக தலைவர் அரவிந்த குமார், விடு தலை நகர் வெ.மணிகண்டன், நங்க நல்லூர் மோகன், மடிப்பாக்கம் அரசு, மாவட்ட மகளிரணி அமைப் பாளர் விஜயலட்சுமி தமிழினியன், பொதுக்குழு உறுப்பினர்  சுமதி மணிகண்டன், மடிப்பாக்கம் தோழர் வழக்குரைஞர் பா.அறிவன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் எம்.சந் தோஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆர்.சந்தோஷ்,  வருண் பிரபு மேடவாக்கம், ஜெகநாதன் திருமலை நகர் வைத்தியலிங்கம் காமராஜபுரம், ஆ.யோவான் காமராஜபுரம் நன்றியுரையாற்றினார். வேலூர் பாண்டு, மா. கழக துணை தலைவர்  

விழாவில் கலந்து கொண்ட தோழமைக் கட்சி தோழர்கள்

எஸ்.அப்புனு, சிஅய்டியு செம் பாக்கம் நகரத் தலைவர்

இ.குழந்தைசாமி, சிபிஎம் செம் பாக்கம் மா. நகர தலைவர்

வி.கண்ணன் (எ) விஜயரங்கன், தாம்பரம் மா. நகர பொருளாளர்

எல்.தனவந்தன், 39ஆவது வட்ட தி மு கழக செயலாளர்

தேவ.முத்து (எ) முருகன், செம் பாக்கம் தெற்கு பகுதி துணைச் செயலாளர் திமுக

ஏ.இஸ்ரேல், செம்பாக்கம் விசிக தலைவர்

எஸ்.கே ஜாகிர் உசேன், ம ம க,  த மு மு க மாவட்ட தலைவர்

அன்சாரி, எஸ்டிபிஅய் செங்கல் பட்டு வடக்கு மாவட்ட துணை தலைவர், மன்ற உறுப்பினர் அ.அபி பல்வி  மேனாள் நகர் மன்ற உறுப்பினர் செம்பாக்கம் ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

சோழிங்க நல்லூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *