‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர் கடிதம்

1 Min Read

கிராமத்தில் பிறந்த நான் மேலாளராக உயர்ந்ததற்கு தந்தை பெரியாரின் கொள்கைகளே காரணம்!

நான் 1980 முதல் இன்று வரை எந்தவித குழப்பம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.  சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து பெரியளவில் படிக்க முடியாமல் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து, 1993 –இல் கு.வெ.கி. ஆசான் தலைமையில், எளிமையான முறையில் தாலி மறுப்பு – சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரு பெண் குழந்தைகள் (மலர், மதி). அவ்விருவரையும் மென் பொறியாளராக படிக்க வைத்து, அவ்விருவரும் தனியார் அய்.டி. கம்பெனியில் வேலை பெற்று இருவருக்கும் நல்ல முறையில் வாழ்க்கை துணை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அதன்பின் 2001 முதல் மேட்டுப்பாளையத்தில் ஒரு வணிக நிறுவனத்தை இரண்டு கழகத் தோழர்களுடன் இணைந்து நல்ல முறையில் நடத்தி வருகிறேன். இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியாரின் கொள்கையும், நம்முடைய இயக்கமும், தங்களின் வழிகாட்டுதலுமே என்பதை மிக்க பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்களின் குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000க்கான வரைவோலையை  (டி.டி.) மிக்க மகிழ்ச்சியுடன் தருகின்றேன். நன்றி.

– ஜி.ஆர். பழனிசாமி, நகர கழக தலைவர், மேட்டுப்பாளையம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *