மழைக்காக தவளைக்குக் கல்யாணம் செய்வதுபோல, இது இன்னொரு மூடத்தனம்.
உ.பி.யின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் மழை பெய்யாததால், மக்கள் தவித்துள்ளனர். அவர்களின் துயரைத் தீர்க்க அப்பகுதி பா.ஜ.க. தலைவர் குட்டுகான் எடுத்த நடவடிக்கை இணைய பயன்பாட்டாளர்களை தலைகுனிய வைத்துள்ளது.
கை, கால்களைக் கட்டியபடி கான் அமர்ந்திருக்க, பெண்கள் அவருக்கு மண்ணால் குளிப்பாட்டியுள்ளனர். அவரும், ‘இந்திர தேவா, உடனே மழை வரணும்’ என்ன வேண்டிக் கொண்டாராம்.
இதற்குப் பதில், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், மக்களின் குறையைப் போக்கியிருக்கலாம்.
மூடத்தனம்!

Leave a Comment