சென்னை, ஜூலை 1 பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் என்று மாற்று திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5 ஆம் தேதி அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வரு கிறது. மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாதாந்திர உதவிபராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதே போல் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான நபர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.’’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.