நான் முதல்வன் திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு
நடப்பாண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு ரூ.25,000 உதவித் தொகை பெற, ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 2 என இருந்தது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 13ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி முக்கிய ஆலோசனை!
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, கலை, இலக்கிய மற்றும் மகளிர் அணியின் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் தனக்குத் தனி அறை ஒதுக்கப்பட்ட பிறகு நடத்திய முக்கிய கூட்டம் இதுவாகும். 2026 தேர்தலுக்கு தயாராவது, அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது
10ஆவது தேர்ச்சி போதும்: ஒன்றிய அரசில் 1,075 காலியிடங்கள்!
ஒன்றிய அரசு துறைகளில் காலியாக 2 1,075 MTS & Havaldar பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 – 27 வயதுடைய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இணையம் மூலம் கணினி வழி தேர்வு நடைபெற்று தேர்ச்சி நடைபெறும். தகுதிக்கேற்ப ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் ஆனது
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், ‘வாட்டர் பெல்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். அதன்படி, பள்ளிகளில் இன்று முதல் அத்திட்டம் அறிமுகமானது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என 5 நிமிடத்திற்கு தண்ணீர் அருந்த இடைவேளை விடப்பட்டது.