கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2025

viduthalai
1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தெலங்கானா மாநில பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் தேர்வு; போட்டியிட வாய்ப்பு தராததால், ராஜா சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்; தெலங்கானா பாஜகவில் விரிசல்.

* “இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேறப் போகிறார்கள்… ஏழைகளின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, வக்ஃபு திருத்த சட்டத்தை பீகார் குப்பைத் தொட்டியில் வீசும்…” தேஜஸ்வி ஆவேசப் பேச்சு.

தி இந்து:

* அரசமைப்பின் முகப்புரையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்த்துப் போராடும்: காங்கிரஸ் தலைவர் கார்கே

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மஹாராஷ்டிராவில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே வாக்காளர்கள் பல முறை வாக்களித்துள்ளனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் குற்றச்சாட்டு.

* தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையை உண்மையிலேயே உணர, ஆங்கிலம் + தாய்மொழி என்ற இரு மொழிக் கொள்கை போதுமானது; ஆங்கிலம் இல்லாமல், குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைகளில் பாதகமாக இருக்கும் என்கிறார் வழக்குரைஞர் ஆர்.சிவா.

. குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *