கடையம், ஜூலை 1- விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் கொடையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில் மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், வெங்காடம்பட்டி குறுவட்டம், அணைந்த பெருமாள் நாடானூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் பிரபாகரன் (27). இவர் 27.6.2025 அன்று நடந்த விபத்தில் காயமுற்று சிகிச்சையில் இருந்த நிலையில் 28.6.2025 அன்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டன.
தொடா்ந்து அணைந்த பெருமாள் நாடானூரில் 29.6.2025 அன்று மாலை நடைபெற்ற இறுதிச் சடங்கில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவன்யா மற்றும் ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.