2 ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணம்
கடந்த 2 ஆண்டுகளில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 60,502 இரு சக்கர வாகன விபத்துகள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகளில் 2023ஆம் ஆண்டில் 8,113 பேரும், 2024ஆம் ஆண்டில் 8,059 பேரும் பலியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க., அமமுக நிர்வாகிகள்!
செந்தில்பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கடந்த சில நாள்களாகவே செந்தில்பாலாஜி, கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவின் பக்கம் சேர்த்து வருகிறார். பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் சண்முகம், அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.