2023ஆம் கல்வி ஆண்டுக்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண் காட்சியின் 2ஆம் பதிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று (17.6.2023) தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக் கான ரஷ்ய துணை தூதர் ஓலெக் என்.அவ்தீவ், சென்னை ரஷ்ய மாளிகையின் இயக்குநரும், துணை தூதருமான கெனடி ஏ.ரோகலேவ், ஸ்டடி அப்ராட் எஜூகேசனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.