தேசிய மருத்துவர்கள் நாள்
இன்று (ஜூலை 1, 2025)
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர் பிதான் சந்திரராய் பிறந்த ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள்.
1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் பிறந்தார் டாக்டர் பிதான் சந்திர ராய். 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் தனது 80ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கி சிறப்பித்தது. விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச் சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழை களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை யாற்றுபவர்களுக்கு கடந்த 2976 ஆம் ஆண்டு முதல் மருத்துவர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்துறையில் குறிப்பிடத் தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான மகத்தான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் நினைவுக்கூர்வோம்!
உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் பிறந்தநாள் (1. 7.1910)
தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக்காகப் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆசிரியர் வேலாயுதம் அரியலூர் மாவட்டம், செயங் கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில் சாமிநாதன் என்பவருக்கும் பொன்னாச்சி அம்மையாருக்கும் அய்ந்தாவது ஆண் குழந்தையாக 1910ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அன்று பிறந்தவர்.
சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் உடற்பயிற்சி கல்வியும், சாரணர் பயிற்சியும் பெற்றவர். ஆசிரியர் பணியில் சேர்ந்து தாம் பணியாற்றிய இடங்களில் சிறப்பாக பணியாற்றினார்.
தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ மற்றும் விடு தலை இதழ்களைப் படிக்க நேர்ந்ததும் அவர் தோற்றுவித்த ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதால் – துணிச்சல் மிக்க வீரராகவே மாறிவிட்டார் வேலாயுதம்.