தருமபுரி, ஜூன் 18 – திராவிடர் கழக தலைமை நிலைய அமைப்பாளர் ஊமை. ஜெயராமனுடைய தம்பி மாரவாடி ஊமை.அர்ச்சுனன் (வயது 57) நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வந்த நிலையில் திடீ ரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 17.-6.-2023 அன்று மறைவுற்றார். அவரது உடல் மாரவாடி பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், கழக மாவட் டங்களின் சார்பில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல் வன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மேனாள் மாவட்ட தலை வர் மு.பரமசிவம், அரூர் தர்மபுரி மாவட்ட ஆசிரியர் அணி தலை வர்கள் தீ.சிவாஜி, கதிர்செந்தில், பகுத்தறிவாளர் கழக பொறுப்பா ளர் முல்லை மதிவாணன், கிருஷ்ண கிரி மாவட்ட பொறுப்பாளர் திராவிட மணி, கிருஷ்ணகிரி நகர தலைவர் தங்கராஜ்,ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் சிவராஜ், கா. சாமிநாதன், மாரவாடி கிளை தலைவர் ஊமை.காந்தி, கிருஷ்ண கிரி ஆறுமுகம், இளைஞர் அணி தோழர்கள் காரல் மார்க்ஸ், தீ. ஏங்கல்ஸ்,தொழிற்சங்க செயலா ளர் கே.மணி, மேனாள் மாவட்ட தலைவர் மு.மனோகரன், இளை ஞரணி செயலாளர் முனியப்பன், எல்லை தனராஜ், சின்னமாது, ஆகி யோர் கலந்து கொண்டு வீரவணக்க முழக் கமிட்டு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினர் அர்ச்சுனனின் உடல் எவ்வித மூடச்சடங்குளும் இன்றி குடும் பத்தாரின் இயக்க ஈடுபாட்டுடன் எளிய முறையில் அடக்கம் செய்யப் பட்டது!