சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா திறந்தவெளி மாநாடாக நடத்தப்படும் மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
3 Min Read

மன்னார்குடி, ஜூன் 30- வருகிற 6ஆம் தேதி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு மாநாட்டை மன்னையில் மிகச் சிறப்பாக நடத்துவது என மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

28/6/2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

கலந்துரையாடல்

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் .இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று நோக்க உரையாற்றினார்  கழக மன்னார்குடி மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சாவூர் மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், நாகை மாவட்டத் தலைவர் V.S.T.நெப்போலியன், மன்னார்குடி மாவட்டச்செயலாளர் கோ.கணே சன், நாகை மாவட்டச்செயலாளர் பூபேஸ்குப்தா, திராவிட விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர்  வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, பகுத்தறிவாளர்களாக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மன்னார்குடி ஒன்றிய கழக செயலாளர் கா.செல்வராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட து.தலைவர்.ந.இன்பக் கடல், மன்னார்குடி நகர தலைவர் எஸ்.என்.உத்திராபதி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் டேவிட், ப.க. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.முரளிதரன், பொதுக்குழு உறுப்பினர். சு.சிங்காரவேலு, வாஞ்சூர். பி.இளங்கோவன், கோட்டூர் ஒன்றிய தலைவர்பெருகவாழ்ந்தான் ஆர்.நாராயணசாமி, சித்தமல்லி இராமதாஸ், கோட்டூர் ஒன்றிய ப.க தலைவர் சிறுகளத்தூர் சு.ராமலிங்கம், ப.க.கோட்டூர் ஒன்றிய அமைப்பாளர் ஆ.சுரேஷ், மன்னார்குடி பாவேந்தன், மன்னார்குடி முருகன், மன்னார்குடி சோ.கார்த்தி, நீடாமங்கலம்  ஒன்றிய இளைஞரணித் தலைவர் கா.சந்திரசேகர்,  இளைஞர் அணி மேனாள் மாவட்டத்தலைவர் கோரா.வீரத்தமிழன், கருவாக்குறிச்சி ப.கோபாலகிருஷ்ணன், எடமேலையூர் ந.லெட்சுமணன், மன்னார்குடி நகரச் செயலாளர் வே.அழகேசன், நீடாமங்கலம் நகரச்செயலாளர் கி.ராஜேந்திரன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் க.இளங்கோவன், மேலவாசல் குணசேகரன்,மன்னை.சித்து, மன்னார்குடி மாவட்ட ப.க.அமைப்பாளர் இரா.கோபால், நல்லிக்கோட்டை சா.நல்லதம்பி, கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன், ப.க.மன்னை நகரத்தலைவர் கோவி.அழகிரி, ப.க.மாவட்டத் தலைவர் .வை.கவுதமன், ப.க.மாவட்டச் செயலாளர்.தங்க.வீரமணி, மன்னார்குடி ஒன்றியத்தலைவர் மு.தமிழ்செல்வன், நீடா ஒன்றிய மேனாள் தலைவர் எடமேலையூர் கே.எஸ்.கே.மேகநாதன், மேலவாசல் குணசேகரன், மன்னார்குடி ஆர்.வெங்கட்ராமன், மன்னை நகர ப.க.செயலாளர் பேராசிரியர் கோ.காமராஜ், இளைஞரணி மாவட்டத்தலைவர் க.இராஜேஷ்கண்ணன்,மாவட்ட துணை செயலாளர் வி.புட்பநாதன், மன்னார்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், மன்னார்குடி சிவா.வணங்காமுடி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சாருகான், கோட்டூர் ஒன்றியதலைவர் எம்.பி.குமார், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், நீடா நகர இளைஞரணி தலைவர் இரா.அய்யப்பன், நீடா ஒன்றியதலைவர் தங்க.பிச்சக்கண்ணு, ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரையாற்றி நன்கொடை வழங்கினார்கள்.

தீர்மானங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற  கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்டதீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவதென தீர்மானிக் கப்படுகிறது.

வருகிற 6ஆம் தேதி மன்னார்குடியில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடியரசு இதழ் நூற்றாண்டு நிறைவுவிழா திறந்தவெளி மாநாடு மற்றும் “கொள்கை வீராங்கனைகள்”  நூல் வெளியீட்டு விழாவினை மக்கள்திரள் மாநாடாக மிகச் சிறப்பாக நடத்துவது எனவும் ஜூலை 6, 7 நாட்களில் மன்னார்குடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

மன்னார்குடி மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பிப்பது எனவும், புதிய சந்தாக்களைத் திரட்டி ஆசிரியரிடம் வழங்குவது எனவும் முடிவு செய்யப் படுகிறது.

மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலை சுற்றுப்பகுதிகளைச் .சீரமைத்து புதுப்பொலிவுடன் உருவாக்குவது எனவும் தீர்மானிக் கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்:

மன்னார்குடி மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்: நீடா மங்கலம் சி.இரம்யா

கழக இளைஞரணி     மாவட்டத் தலைவர்: கோரா.வீரத்தமிழன்.

கழக இளைஞரணி    மாவட்டத் துணைத் தலைவர்: க.ராஜேஷ் கண்ணன்

இறுதியில் மன்னை நகர கழக செயலாளர் வே.அழகேசன் நன்றி கூறினார்.

நன்கொடை
செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் அ.செம்பியன் ரூ.500, மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் ரூ.500, விடுதலை வளர்ச்சி நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *