என்று மடியும் இந்தக் கொடுமை! கருவில் இருப்பது பெண் குழந்தையாம்! வீட்டார் துன்புறுத்தலால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவண்ணாமலை. ஜூன் 30–– கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமா தேவி(25), மகள் மோகனாசிறீ (2) இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாசிறீயும் கடந்த 24ஆம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றதில் இருவரும் பலியானதாக கூறப்பட்டது.

ஆனால், உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. விக்னேஷ் மற்றும் உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிவித்துள்ளனர். (சட்டப்படி இதுவும் குற்றமாயிற்றே).

இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்க வற்புறுத்தியது மட்டுமில்லாமல் அதே கிராமத்தைச் சார்ந்தவரை அணுகி உமாதேவியின் சுருவை கலைக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உமா தேவி, பெண் குழந்தையுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து உமா தேவி, அவரது முதல் பெண் குழந்தை தற்கொலைக்கு காரணமான கணவர் விக்னேஷ் (27), மாமனார் ஜெயவேல் (58) மாமியார் சிவகாமி (43) மற்றும் கருவை கலைக்க முயற்சிக்க உதவிய அதே ஊரை சேர்ந்த சாரதி (39) ஆகிய 4 பேரை கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

சுருவில் உள்ள பெண் குழந்தையை கலைக்க முயற்சி செய்ததால் கர்ப்பிணித் தாய் மற்றும் பெண் குழந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *