‘கடவுள்’ சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல் உடைப்பு – மூவர் கைது

1 Min Read

சென்னை, ஜூன் 30- புழல், சந்தோஷ் நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலில் இருந்த காணிக்கை பணம் 10,000 ரூபாயை திருடி தப்பினர்.

காலை கோவில் நடை திறந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலின் பொருளாளர் குருசாமி, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில், கொளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ் என்கிற இளங்கோவன், 20, சஞ்சய், 24, பிரித்விராஜ் என்கிற கிஷோர், 24, ஆகிய மூவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மூவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *