சிறுநீரகங்களில் கற்களா? கரைக்க உதவும் உணவுகள்!

viduthalai
1 Min Read

எலுமிச்சை சாறு

வீட்டில் எளிதாக செய்து பயன்படுத்தக் கூடிய எலுமிச்சை சாற்றில் உள்ள இயற்கையான சிட்ரேட்கள் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. கற்களை உடைக்கும் திறனும் இதில் உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மில்லி கிராம் அளவு கால்சியம், உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இளநீர்

இளநீர் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள ஓர் அருமருந்து. அதுமட்டுமல்லாமல், சிறுநீரகப் பாதையிலுள்ள கழிவுகளை நீக்கிவிடுவதால் மினரல்கள் படிவது தடுக்கப்படுகின்றது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறைகிறது.

மாதுளை

மாதுளை பழத்தில் ஆண்ட்டி-ஆக்சிடண்ட்ஸ் நிரம்பப் பெற்றுள்ளன. சிறுநீரக ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான சத்துகளும் இந்த கனியில் உள்ளன.

இதிலுள்ள இயற்கை அமிலங்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணமாக விளங்கும் மினரல்கள் படிவதை குறைக்கின்றன. மேலும், இவை சிறுநீரகப் பாதையில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றிவிடுவதால் உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *