ஒற்றைப் பத்தி

2 Min Read

ஆரியன் கண்டாய்

துக்ளக் கேள்வி: பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கக் கூடாது?

பதில்: இப்போது யாரும் யாரையும் வளர்ப்பதில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள். நமது விருப்பம் பெண்கள், ஆண் பிள்ளைகள் வளர்வதுபோல் வளராமல் இருக்கவேண்டும். 

இதுதான் ‘துக்ளக்’ பதில்.

பெண்களுக்குப் புத்தி சொல்ல குருமூர்த்தி அய்ய ருக்கு உரிமை கொடுத்தது யார்?

வேசியர் வீட்டுக்கு குஷ்டரோகி கணவனைத் தூக்கிச் சென்ற மனைவி மாதிரி பெண்கள் இருக்க வேண்டுமோ?

துக்ளக் கேள்வி: லஞ்சம், டிப்ஸ் என்ன வித்தியாசம்?

பதில்: கேட்டுப் பெறுவது லஞ்சம். கேட்காமல் பெறுவது டிப்ஸ்.

அதாவது கோவிலில் அர்ச்சனை தட்டு, உண்டியல் சமாச்சாரம்போல – அப்படித்தானே!

துக்ளக் கேள்வி: கேரள, கருநாடக, ஆந்திர மக்கள் எவரும் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள சிலர் மட்டும் நாயர் பிடித்த புலிவாலைப் போல், திராவிடர் என்ற வார்த்தையை விடாது பிடித்திருக்கிறார்களே, ஏன்?

பதில்: திராவிடத்தைக் கைவிட்டால், ஈ.வெ.ரா. வைக் கைவிட வேண்டி வரும். ஈ.வெ.ரா.வைக் கைவிட்டால், பிராமண துவேஷத்தைக் கைவிட வேண்டி வரும். பிராமண துவேத்தைக் கைவிட்டால் ஆரிய பிம்பத்தைக் கைவிட வேண்டி வரும். அது கையைவிட்டுப் போனால், திராவிட அரசியல் கடையையே மூடவேண்டி வரும். திராவிடத்தைக் கைவிட்டு தமிழைக் கையிலெடுத்தாலும் ஆபத்து. தமிழ் காட்டு மி£ரண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள், தமிழ் ஒரு சனியன், திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம், தொல்காப்பியன் ஆரிய கைக்கூலி என்ற ஈ.வெ.ரா.வின் தமிழ்பற்றிய வர்ணனைகள் எல்லாம் கழகங்களைத் துரத்தும். அதனால், திராவிடம் ஒரு பாதி, தமிழ் ஒரு பாதி என்று, ஓடும் வரை ஓடட்டும், சம்பாதித்தவரை லாபம் என்ற அரசியல் தமிழகத்தில் நடக்கிறது.

நமது பதில்:

ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து, அந்நாளில் பூணூலைப் புதுப் பித்து தங்களை துவிஜாதி (இரு பிறப்பாளர்கள்) என்று காட்டிக் கொள்ளும் கூட்டம் துவேஷத்தைப்பற்றி பேசலாமா?

1971 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடந்த சம்பவத்தை திரித்து வெளி யிட்டு, தேர்தலில் மூக்குடை பட்டது யார்? பெரியாரின் செல்வாக்கு எத்தகையது என்பதைப் புத்தி கொள்முதல் பெறாவிட்டால், மேலும் மூக்குடைய வேண்டியதுதான்!

ஆரியர் – திராவிடர் என்று பிரித்தது யார்? ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்ற பன்னிரு திருமுறைப் பாட்டைப் பாடியது பெரியார் ஈ.வெ.ரா.வா?

தமிழன் கட்டிய கோவி லில் தமிழில் அர்ச்சனை என்றால், எதிர்ப்பு, தமிழன் அர்ச்சகனானால் சாமி தீட்டுப்பட்டுவிடும் – செத்துப்போய்விடும் என்று சொல்கிறவர்களைவிட 22 காரட் துவேஷிகள் யார்? யார்?

21.6.2023 ‘துக்ளக்’குக்கான பதில்கள்!

 –  மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *