டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசுக்கு அதிமுக துணை போகிறது, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம். 2026 தேர்தல் வெற்றிக்கு 68000 டிஜிட்டல் வாரியர்ஸ் உருவாக்கியுள்ளது திமுக.
* ம.பி.யில் மாணவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்; உச்சநீதிமன்றம் கண்டனம். விடுதலை செய்திட ஆணை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கூட்டாட்சி முறை இந்தியாவை சிதைக்கும் என்ற விமர்சனங்களுக்கு, அரசமைப்பு சட்டம் என்று நாட்டை ஒன்றுபடுத்தும் என அம்பேத்கரின் கருத்தை நினைவு படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.
தி இந்து:
* மத்தியப் பிரதேசத்தில் 27% ஓபிசி இடஒதுக்கீடு: பாரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இருந்தபோதிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டினை நிறைவேற்றுவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் அரசியல்: என்.டி.ஏ. கூட்டணியில் நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளி சிராக் பஸ்வான் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதால், கூட்டணியில் சிக்கல்.
* பள்ளிகளில் உடற்பயிற்சி நடன வடிவமான ஜூம்பாவை கேரள அரசு அறிமுகப்படுத்தியது; ‘கல்வியிலிருந்து மதத்தை விலக்கி வைக்கவும்’ என எதிர்ப்பாளர்களுக்கு பதில்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முகவுரையில் சோசலிசம், மதச்சார்பற்ற வார்த்தை சேர்ப்பு: ‘ஸநாதன உணர்விற்கு எதிரானதாம்’: அரசமைப்பு சட்டத்தின் மேல் உறுதி ஏற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்க சதித்திட்டமா? எதிர்க்கட்சிகள் கண்டனம். மகாராஷ்டிரா தேர்தலை போல் பீகார், அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு தேர்தல்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.
குடந்தை கருணா