மறைமலைநகர், ஜூன் 29- செங்கல் பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28-06-2025 அன்று மாலை 5 மணி அளவில் மறைமலைநகரில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு.லோகநாதன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு ஆகியோர் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் நோக்கவுரையுடன் நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் தமது தலைமையுரையில் கடந்த காலங்களில் திராவிடர் கழகம் எப்படி மாநாடுகளை தனித்துவத்துடன் வெற்றி கரமாக நடத்தியதே அதே போல் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி செங்கற்பட்டு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இந்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டையும் மிக எழுச்சி யாக வெற்றிகரமாக நாம் அனைவரும் சேர்ந்து நடத்துவோம் என சூளுரைத்தார்.
தீர்மானம்
கீழ்க்கண்ட கருத்துகளை தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்
மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகள் வைப்பது
மாநாட்டு பேரணியில் வாகனங்களில் சுயமரியாதை இயக்கத்தின் சிறப்புகளை காட்சிபடுத்துவது
சமூக காப்பு அணியை பேரணியில் பங்கேற்க வைப்பது
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு மாநாட்டை விளக்கி 5 மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது
மாநாட்டை விளக்கி 5 மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவர் எழுத்துகள் மூலம் விளம்பரம் செய்வது
பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு சிறப்புகளை எடுத்துரைப்பது.
நாடகங்கள் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு சிறப்புகளை எடுத்துரைப்பது.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது.
மாநாட்டுப் பணிகளுக்காக அலுவலகம் அமைப்பது
நன்கொடை
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மாநாட்டு முதல் தவணை நன்கொடையாக அறிவித்தார்கள்:
கூடுவாஞ்சேரி ராசு – 5000
தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன் – 5000
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இளம்பரிதி -10000
மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.அருண்குமார் – 5000
செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் முருகன் – 10000
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார்- 10000
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் – 5000
தாம்பரம் நகர திராவிடர் கழக தலைவர் மோகன்ராஜ் – 5000
மறைமலைநகர் நகர திராவிடர் கழக அமைப்பாளர் முடியரசன் – 5000
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தீனதயாளன் – 5000
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் செம்பியன் – 50000
கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சகாயராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் நாத்திகன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இளம்பரிதி, மாநில இளைஞர் அண துணை செயலாளர் மு.அருண்குமார், செங்கல்பட்டு மாவட்ட துணை செயலாளர் முருகன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக சிவகுமார், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மோகன், தாம்பரம் நகர திராவிடர் கழக தலைவர் மோகன் ராஜ், மறைமலைநகர் நகர திராவிடர் கழக அமைப்பாளர் முடியரசன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தீனதயாளன், பகுத்தறிவு கலைத்துறை மாநிலத் தலைவர் கலைவாணன், செங்கல்பட்டு மாவட்டம் பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் பிச்சைமுத்து, யாக்கோபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் அறிவு, ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் கௌதம், மறைமலைநகர் நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வசந்தன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு.லோகநாதன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு,செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அ. செம்பியன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன்,
மறைமலைநகர் நகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன் உள்ளிட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.கூட்டத்தின் இறுதியாக மறைமலைநகர் நகர திராவிடர் கழக தலைவர் திருக்குறள் வெங்கடேசன் அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.