விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிலெட்சுமி திருமண மண்டபத்தில் 18.6.2023 அன்று மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
மேடையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், கடலூர் மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப. சுப்பராயன், காரைக்கால் மாவட்டத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி. தங்கராசு, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா. அன்பழகன், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன், கல்லக் குறிச்சி மாவட்ட தலைவர் கோ.சா. பாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.
👉பத்து மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்.
👉கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ சக்திவேல், கழக இளைஞரணித் தோழரும் ஒலி – ஒளி அமைப்பாளருமான பெரியார் மணி ஆகியோருக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
👉அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் த. கார்த்திக் அவர்களின் மகன் கா.சமரன் தமிழர் தலைவரிடம் இரண்டு பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கினார்.
புதிய பொறுப்பாளர்கள்
தலைமைக் கழக அமைப்பாளர்:
ஆண்டிமடம் க.சிந்தனைச் செல்வன்
பொறுப்பு மாவட்டங்கள்: அரியலூர், பெரம்பலூர்.
அரியலூர் மாவட்டச் செயலாளர்:
அரியலூர் மு. கோபால கிருஷ்ணன்
கல்லக்குறிச்சி மாவட்ட துணைத் தலைவர்:
குழ. செல்வராசு
விருத்தாசலம் கழக மாவட்டம்:
மாவட்டத் துணைத் தலைவர்: அ.பன்னீர்செல்வம்,
மாவட்ட துணைச் செயலாளர் : த. சேகர்
விருத்தாசலம் நகரம்:
தலைவர்: ந. பசுபதி,
செயலாளர்: மு. முகமதுபஷீர்,
அமைப்பாளர்: சு.காரல்மார்க்ஸ்.