டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘‘ஆர்எஸ்எஸ் இந்திய அரசமைப்பை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* மகாராட்டிரா பள்ளிகளில் ‘ஹிந்தி திணிப்பு’: 20 ஆண்டுகளில் முதல் முறையாக கைகோர்த்த உத்தவ், ராஜ் தாக்கரே
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*ஊராட்சி மன்றங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் இன்னமும் தராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து சட்ட ஆலோசனை செய்து வருகிறார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்.
தி இந்து:
*பீகாரின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வியை ஆதரிக்கும் காங்கிரஸ். தலைவர்கள்: பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவருமான அகிலேஷ் குமார் சிங் மற்றும் இளைஞர் தலைவர் கன்ஹையா குமார் ஆகியோர் ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*”ஆர்.எஸ்.எஸ். முகமூடி” மீண்டும் கழன்று விட்டது என்றும், அரசமைப்பு “சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதி பற்றி பேசுவதால்” அது அவர்களைத் தொந்தரவு செய்கிறது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்காளர்கள் தங்கள் தகுதியை மீண்டும் நிரூபிக்கச் சொல்வது பீகார் போன்ற ஏழை மாநிலத்தில், லட்சக்கணக்கானோர் வெளியே வேலை செய்யும் இடத்தில் பெரும் பிரிவினரின் வாக்குரிமையை பறிக்கக்கூடும். அது ஏன் தேவைப்படுகிறது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் குமார் ஜா கேள்வி.
*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: காமராஜர் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூலை 15 ஆம் தேதி விரிவாக்கம் தொடங்கப்படும், இது கல்வி மேம்பாட்டு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
* நிதி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான சிஅய்பிஅய்எல் (கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்) மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வேலை மறுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஅய்) உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெலிகிராப்:
* இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் ஓபிசி மாணவர்கள் பொது பிரிவைச் சேர்ந்த மாணவர்களை விட அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள். இந்தத் தரவுகள் ‘தகுதி பற்றிய கட்டுக்கதையை’ – இடஒதுக்கீடு அதிக தகுதி வாய்ந்த பொதுப் பிரிவு மாணவர்களை பலியாக்குகிறது என்ற கூற்றை – தவிடுபொடியாக்கி வருகிறது.
– குடந்தை கருணா