மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு

viduthalai
2 Min Read

அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி

கந்தர்வக்கோட்டை, ஜூன் 28 மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்து மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2006-2011 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழ் நாட்டில் ஊனமுற்றோர் அலு வலகம் என்பதை மாற்றுத்திறனாளி அலுவலகம் என்பதை மாற்றி மாற்று திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறையை உருவாக்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய நேரடி பார்வையில் வைத்திருந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, போக்குவரத்தில் 75 சதவீதம் மானியம், உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழக பொற்கால ஆட்சியில்  செயல் படுத்திய  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறோம்.

கலைஞர் வழியில் சமூக நீதி ஆட்சி நடத்தும் திராவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளி நலத்துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி மாற்றுத் திறனாளி களும் அரசியல் அதிகாரம் பெறுவதற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு 60க்கும் மேற்பட்ட அரசா ணைகளை வெளியிட்டு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாற்றுத்திறனாளி ஏற்றம் பெற்று வருகின்றனர்.  பராமரிப்பு உதவி தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, நவீன வசதியுடன் நான்கு சக்கர வாகனமும் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாற்றத்தினாளிகள் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.  மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி பயிலும் வகையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கலைஞர் வழியில் வழங்கி பொற் கால ஆட்சியை நடத்தி வருகிறார்.

நான்கு சதவீத இடஒதுக்கீடு அரசாணை

தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். பதவி உயர்வு, நான்கு சதவீத  இடஒதுக்கீடு அரசாணை மூலம் பல்லாயிரம் கணக்கான மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகளை உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்,   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *